தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டணம் அறிவிக்கப்படுமா?- வனத்துறை - Kodaikanal Tourist Entrance Fee

கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல முறையாக கட்டணம் அறிவிக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் குழப்பத்தில் வருகின்றன.

kodaikanal tourist
கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டணம் அறிவிக்கப்படுமா?- வனத்துறை

By

Published : Dec 30, 2022, 5:56 PM IST

Updated : Dec 30, 2022, 6:30 PM IST

கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டணம் அறிவிக்கப்படுமா? - வனத்துறை

திண்டுக்கல்:அருகே கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பணிகளும் வருகை தருகின்றனர். மேலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிரதான சுற்றுலா தலங்களாக இருக்கும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண்பாறை, குணா குகை, பைன் மர காடுகள், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏறி உள்ளிட்ட பல்வேறு இருந்து வருகிறது.

இந்தப் பகுதிகளுக்கு சென்று பயணிகள் இயற்கையின் அழகு ரசித்தும், புகைப்படம் எடுத்தும் தங்களது சுற்றுலாவை அனுபவித்து வருகின்றன. தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடங்களுக்கு அந்தந்த பகுதிகளில் வனத்துறை மூலமாக கட்டணமானது வசூல் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் இதனை முறைப்படுத்தி ஒரே இடத்தில் ஒரே நுழைவுச்சீட்டு கட்டணம் என்ற முறையில் வசூல் செய்யப்படும் என வனத்துறை சார்பில் வாகன ஓட்டுனர்கள் சிறு வியாபாரிகளிடம் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

தொடர்ந்து எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலா தலங்களுக்கு வரும் புத்தாண்டு 02.12.2023 அன்று முதல் நுழைவு கட்டணம் மாறுதல் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் வனத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் முறையான கட்டண அறிவிப்பை வெளியிடாமல் கட்டணம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு மட்டும் வனத்துறை அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என அனைவரும் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஹீராபென் மோடி மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்!

Last Updated : Dec 30, 2022, 6:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details