மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அருகே சுமார் 30 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது பேரிஜம் ஏரி. இந்த ஏரி முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது, கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள தொப்பிதூக்கிபாறை, அமைதி பள்ளத்தாக்கு, மதிகெட்டான்சோலை உள்ளிட்ட அமைதியான இயற்கை சூழலை அனுபவிக்கவும், வனவிலங்குகளை பார்வையிட விரும்பியும் சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டிவருவது உண்டு.
இந்த இடத்திற்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகள் வனத்துறையின் மூலம் முன் அனுமதி பெற்று, நுழைவு கட்டணம் செலுத்தி செல்லவேண்டும். இந்நிலையில் பேரிஜம் பகுதியில் உள்ள சாலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் மிகவும் சேதமடைந்துள்ளன.