திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் பல்வேறு மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு, கீழ்மலை கிராமங்களான பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சு வீடு, தாண்டிக்குடி உள்ளிட்டப் பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது. இங்கு வாழை, காப்பி, அவரை, கேரட், பலா உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இங்கு விவசாயம் செய்யும் மக்களுக்கு பெரும் இடையூறாக வன விலங்குகள் இருந்து வருகிறது. குறிப்பாக காட்டெருமை, பன்றி, சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் உலா வருவது தொடர் கதையாக உள்ளது. அண்மைக்காலமாக யானைக்கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால், மக்கள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இதனால், விவசாயம் முற்றிலும் அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.