திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருவதைத் தடுக்க சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சுற்றுலாத் தலங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டவர்கள், வெளிமாநிலத்தவர்கள் உடனடியாக வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜெர்மனி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலிலிருந்து வெளியேறுமாறு நகராட்சி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அவர்களின் பயண விவரங்களையும் பதிவு செய்துள்ளனர்.
கொடைக்கானலில் வெளியேற்றப்படும் சுற்றுலாப் பயணிகள் மேலும், கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களும் மருத்துவச் சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து வாகனங்களுக்கும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி முதல் வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேவிட்-19 அச்சம்: வெறிச்சோடிய உதகை