பழனியில் அசைவ உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனைபழனியில் அசைவ உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை திண்டுக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பழனி நகரில் செயல்பட்டு வரும் அசைவ உணவு கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகள் சமையலுக்கு பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பழனி நகரில் செயல்பட்டு வரும் அசைவ உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரயில் நிலைய பகுதியில் செயல்பட்டு வரும் அசைவ உணவுக் கடைகளில் சோதனை செய்தபோது பல கடைகளில் கெட்டுப்போன இறைச்சியை வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து 17 கிலோ அளவில் ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் குப்பையில் கொட்டி அழித்தனர்.
கெட்டுப்போன இறைச்சியை சமையலுக்கு பயன்படுத்தியதாக உணவக உரிமையாளர்களுக்கு மூவாயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் சமையல் கூடங்களை சுகாதாரமற்ற முறையில் வைத்து இருந்ததாக ஐந்து உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பழனி உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம்.. 3 மாதத்தில் விலை மாற்றம் - தமிழக அரசின் நடவடிக்கை என்ன?