திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சுற்றுலா தலங்களில் மிகவும் பிரபலமானது. இங்குள்ள மக்களுக்கு சுற்றுலா சார்ந்த தொழில்களே வாழ்வாதாரமாக இருந்துவருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக சுற்றுலாவுக்காக வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.
பின்னர் 144 தடை உத்தரவு காரணமாகவும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் இங்குள்ள பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொடைக்கானல் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இங்கு சாலை வசதிகளின்றி வனப்பகுதிக்குள் உள்ள மலை கிராமங்களிலும் மக்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில் தற்போது அரசு வழங்கும் நிவாரண உதவி தொகையும், உணவு பொருட்களும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.