திண்டுக்கல்: சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம், ஆத்தூர், செம்பட்டி என பெரும்பான்மையானப் பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், பூச்சந்தை மூடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயி முனியாண்டி கூறுகையில், 'ஒரு ஏக்கருக்கு ரூபாய் 20 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்துள்ளோம். பூக்கள் நன்றாக பூக்கும் நேரத்தில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது' என்றார்.