தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனியில் நிரம்பிய பாலாறு-பொருந்தலாறு அணை; முதல் வெள்ள அபாய எச்சரிக்கை - Palar Porundalar Dam coastal area in Palani

பழனியில் பாலாறு-பொருந்தலாறு அணை தொடர் மழையால் நிரம்பியதைத் தொடர்ந்து, சண்முகா நதி ஆற்றின் கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம்
வெள்ளம்

By

Published : Aug 4, 2022, 12:51 PM IST

திண்டுக்கல்: பழனி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாறு - பொருந்தலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 60 அடி உயரம் கொண்ட பாலாறு - பொருந்தலாறு அணை தற்போது முழுகொள்ளவை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் வருகிறது.

மேலும், அணையை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு கூடுதல் தண்ணீர் வர வாய்ப்புள்ளது. அணை நிரம்பியுள்ளதால் சண்முகா நதி ஆற்றில் இன்று (ஆக.4) கூடுதல் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

பழனியில் நிரம்பிய பாலாறு-பொருந்தலாறு அணை; முதல் வெள்ள அபாய எச்சரிக்கை

இதனால் பொதுமக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சண்முக நதி ஆற்றின் கரையோரத்தில் விவசாயிகள் ஆடு மாடுகளை ஓட்டிச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு..! 3ஆவது நாளாக தொடரும் தடை...

ABOUT THE AUTHOR

...view details