திண்டுக்கல்அருகேமுத்தழகுபட்டியில் பழமையான புனித செபாஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, நேற்று (ஜூலை 31) தொடங்கிய திருவிழா வரும் ஆக.3 ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும். திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ஆலய மைதானத்திலுள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக செபஸ்தியார் உருவம் பொறித்த கொடி, தாரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் முத்தழகுபட்டியில் உள்ள தெருக்களின் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னதானம் நிகழ்ச்சி வரும் 2ஆம் தேதி இரவு பிரமாண்டமாக நடைபெறும். அன்றைய தினம் பொதுமக்களின் வேண்டுதலை நிறைவேற்றிக்கொடுத்த செபஸ்தியாருக்கு நேர்த்திக்கடனாக வழங்கக்கூடிய அரிசி, ஆடு, கோழி போன்றவற்றைக்கொண்டு அசைவ அன்னதானம் தயார் செய்யப்பட்டு விடிய விடிய உணவு பரிமாறப்பட உள்ளது.
இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதனையடுத்து 3ஆம் தேதி பகல் தேர் பவனியுடன் திருவிழா நிறைவடைகிறது.
புனித செபஸ்தியார் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் இதையும் படிங்க: நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் பத்து ஆண்டுகளாக மீட்க முடியாத நிலம் - மாவட்ட ஆட்சியர் முன்பு முதியவர் தீ குளிக்க முயற்சி!