திண்டுக்கல்: விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர், முகமது அசாரூதின். இவரது ஒன்றரை வயது குழந்தை ஆசாத் வீட்டின் ஒரு அறைக்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு தவித்துள்ளார்.
இதனால் பெற்றோர் கதவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

உடைக்க முடியாததால் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் ஹைட்ராலிக் ஓப்பனர் மூலம் கதவைத் திறந்து, குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.
குழந்தையின் பெற்றோர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு ஆனந்தக் கண்ணீருடன் நன்றியைத் தெரிவித்தனர். இதைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரை வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க:கிணற்றில் விழுந்த கரடி - ஏணியில் ஏறி தப்பி ஓட்டம்