தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நூற்பாலையில் தீ விபத்து - ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம் - குடோனில் தீ விபத்து

திண்டுக்கல் அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

நூற்பாலையில் தீ விபத்து
நூற்பாலையில் தீ விபத்து

By

Published : Nov 6, 2021, 2:49 PM IST

திண்டுக்கல்:யாதவ மேட்டு ராஜாக்காப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்திரா நகரில் நூற்பாலை நடத்தி வருகிறார். தீபாவளியை முன்னிட்டு நவ.04ஆம் தேதி முதல் நான்கு நாள்கள் நூற்பாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (நவ.05) மாலை காவலர் கொல்லன் மட்டும் பணி புரிந்து கொண்டிருந்தார். மாலை மின்விளக்கு போடுவதற்காக உள்ளே சென்று சுவிட்ச்சை போடும்போது, நூற்பாலையில் பின்புறமுள்ள குடோனில் புகை வருவதைக் கண்ட காவலர், ஜெயசீலன், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

நூற்பாலையில் தீ விபத்து

தீயை கட்டுக்குள் கொண்டுவந்த வீரர்கள்

பின்னர்,அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் பல நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள், மின்சாதனப் பொருள்கள் உள்ளிட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.

தீ விபத்து தொடர்பாக தாடிக்கொம்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சிசிடிவி பதிவு: நொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய வாகனம் - தந்தை, மகன் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details