இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி பகுதியில் ஹரிஹரன் (49) என்பவருக்குச் சொந்தமான மாங்காய் குடோனும் அடைக்கப்பட்டு இருந்தது.
அவருக்கு சொந்தமான கார் ஒன்றையும், இரண்டு இருசக்கர வாகனங்களையும் குடோனுக்கு உள்ளே வைத்திருந்தார். அப்போது மாலை திடீரென குடோனிலிருந்து புகை கிளம்பியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.