திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், குடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவர் ராமசாமி தலைமையிலான விவசாயிகள் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், "வேடசந்தூர் அருகே சிறிய தொட்டியில் கூட ஆற்றின் குறுக்கே வெங்கட்ராமன் அய்யங்கார் அணைக்கட்டிலிருந்து, லட்சுமணம்பட்டி அணைக்கட்டிற்குச் செல்லும் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக காணாமல் போய் உள்ளது.
இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை அலுவலர்கள் நீர்வள ஆதாரத்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வாய்க்காலைக் கண்டுபிடித்துத் தரவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு படத்தில் கிணற்றைக் காணவில்லை என புகார் அளித்ததுபோல, வாய்க்காலைக் காணவில்லை என அக்கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் உதவி ஆய்வாளர்