தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிர்ச்சி வீடியோ: மீதி சில்லறை கேட்ட மதுபிரியர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பல் - சில்லறை பாக்கி தகராறில் மோதல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளச் சந்தையில் மது வாங்கிய நபர் மீதி சில்லறை கேட்டதற்காக சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ
வீடியோ

By

Published : Apr 10, 2022, 10:12 AM IST

Updated : Apr 10, 2022, 11:07 AM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறுகிறது. அந்த வகையில் நத்தம் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள கள்ளச் சந்தையில் மது வாங்க வந்த நபருக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையே மீதி சில்லறை கேட்டதால் தரகாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மது வாங்கியவர் சரமாரியாக தாக்கப்பட்டார். இதுதொடர்பான கொடூரதாக்குதல் தாக்குதல் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக வீடியோவில், மது வாங்கிய நபரை ஐந்து பேர் சேர்ந்து கேபிள் வயர், கம்பி என்று கையில் கிடைக்கும் பொருள்களை கொண்டு தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனிடையே தாக்கப்பட்ட நபர மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

மது வாங்க வந்த நபரை 5 பேர் தாக்கும் அதிர்ச்சி வீடியோ

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தாக்குதல் நடந்த இடத்தில் பல மாதங்களாக மது விற்பனை நடந்து வருகிறது. எந்தவித நடவடிக்கையும் இல்லை. திண்டுக்கல் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் நத்தம் பகுதியில் கொட்டாம்பட்டி சாலை, செந்துறை சாலை, மதுரை சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வேலை வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி - செல்ஃபோன் டவரில் ஏறி இளம்பெண் போராட்டம்

Last Updated : Apr 10, 2022, 11:07 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details