திண்டுக்கல்: முதல் அலை வீசியபோது 2020ஆம் ஆண்டு முழு ஊரடங்கு எந்தவித தளர்வுகளின்றி செயல்படுத்தப்பட்டது. அப்போது திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குள்பட்ட 48 வார்டு பகுதிகளிலும் பொதுமக்களின் வசிப்பிடத்திற்குச் சென்று காய்கறிகள் விற்பனை செய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்தது.
இதையடுத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது சொந்த வாகனங்களைப் பதிவுசெய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் காய்கறி வியாபாரம் செய்வதற்கு வாகனம் ஓட்டினர்.
இதற்காக மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு வாகன வாடகையாக ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் என நிர்ணயம் செய்திருந்தனர். இதற்கான தொகை பலருக்கு வழங்கப்பட்ட நிலையில் 35 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு வாடகையில் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று (ஜூன் 24) திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், தனது வாகன வாடகைத்தொகை வராததைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.