தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல்லில் பெண் போலி சாமியார் கைது - திண்டுக்கல் பெண் போலி சாமியார்

திண்டுக்கல்லில் ஆசிரமம் நடத்த நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, 5.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.

பெண் போலி சாமியார் கைது
பெண் போலி சாமியார் கைது

By

Published : Jan 5, 2022, 8:54 PM IST

திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெரு பகுதியைச் சேர்ந்தவர் பபிதா என்ற பவித்ரா. இவர் தனக்கு காளியின் பரிபூரண அருள் இருப்பதாகக் கூறிவந்துள்ளார்.

திண்டுக்கல்லில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னிடம் ஆசி பெற்றுக் கொள்ள பொதுமக்கள் வருமாறு அவர் விளம்பரப்படுத்தியுள்ளார்.

இதனை அடுத்து நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தவயோகி என்ற ஆண் சாமியாரிடம், கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் நடத்த நிலம் வாங்கி தருவதாகக் கூறி, ரூ. 5.50 லட்சம் பணம் மற்றும் 60 சவரன் தங்க நகைகளை ஏமாற்றி பெற்றுள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, நிலக்கோட்டை காவல் நிலையத்தில் தவயோகி புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பவித்ராவைத் தேடிவந்தனர்.

இந்நிலையில் பவித்ரா அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

பெண் போலி சாமியார் கைது

அதன் அடிப்படையில் நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் குரு வெங்கட் மற்றும் சார்பு ஆய்வாளர் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையினர் அவரது வீட்டிற்குச் சென்று பவித்ராவையும் அவரது தங்கை ரூபாவதியையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க:K T Rajendra Balaji arrested: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைதும் பின்னணியும்!

ABOUT THE AUTHOR

...view details