திண்டுக்கல்:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியில் மெடிக்கல் வைத்திருப்பவர் செந்தில் (43). திருவண்ணாமலையில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக இவரது மனைவி யசோதா(39), மகன் பிரகாஷ்(21), மகள் சபிபிரபா (18) ஆகியோர் இன்று (ஏப்.8) காரில் சென்று கொண்டிருந்தனர். காரை செந்திலின் மகன் பிரகாஷ் ஓட்டி வந்துள்ளார்.
சரக்கு லாரியில் கார் மோதிய விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு - வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு
வேடசந்தூர் அருகே முன்னர் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களது கார் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அருகே அய்யலூர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற சரக்கு லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில், காரின் முன்பகுதி முழுவதும் அப்பளமாக நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே காரை ஓட்டிவந்த பிரகாஷ் உயிரிழந்தார். படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற வழியில் அவரின் தந்தை செந்திலும் பின் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் அவரின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தினால் திண்டுக்கல் - திருச்சி தேசிய நான்கு வழி சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பேருந்துகள் மீது கல்வீச்சு - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு