திண்டுக்கல்: தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் கொடைக்கானலும் ஒன்று. அங்கு, அரசு பேருந்துகள் மூலமாகவும் தங்களின் சொந்த வாகனங்களின் மூலம் மக்கள் வருகை தருகின்றனர்.
இதையடுத்து, கொடைக்கானல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் கூடும் இடமாக பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் சென்று வருகிறது. தற்போது, கரோனா பரவி வரும் சூழலில் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்ற படுவதில்லை. பேருந்து நிலைய பகுதியில் மக்கள் மிகவும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
மேலும், பேருந்தில் பயணிக்கும் பயணிகள் முகக்கவசம் அணியாமலும் தகுந்த இடைவெளி பின்பற்றாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயமும் இருந்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 'தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது பாஜக' - திருமாவளவன் தாக்கு