தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவம் பஞ்சுகளை அரசே கொள்முதல் செய்யணும் - கொடைக்கானல் விவசாயிகள் - dindigul latest news

20 கிலோ எடை கொண்ட இலவம் பஞ்சு மூட்டை ரூ.4 ஆயிரத்துக்கு மட்டுமே விற்பனையாகி பெரிதும் நஷ்டம் ஏற்படுவதால், அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலவம் பஞ்சு
இலவம் பஞ்சு

By

Published : Jul 17, 2021, 7:03 AM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் கீழ்மலை, ஆடலூர், பன்றிமலை, அமைதிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் இலவம்பஞ்சு அதிகமாக பயிரிடப்படுகின்றன.

ஒரு ஆண்டில் ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே அறுவடை நடைபெறும். தற்போது காய் முதிர்ந்த நிலையில் காணப்படுவதால், இலவம் பஞ்சு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக தேவையான மழைப் பொழிவு இல்லாததால் வரத்து குறைந்து காணப்பட்டது. வரத்து குறைவால் இலவம் பஞ்சு அதிக விலை போகும் என விவசாயிகள் ஆர்வமுடன் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது 20 கிலோ எடை கொண்ட இலவம் பஞ்சு மூட்டை, ரூ. 4 ஆயிரத்துக்கு மட்டுமே விற்பனையாவதால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறைவான ஊதியம் குறித்து கூறும் தோட்டத் தொழிலாளியின் காணொலி

லாபகரமான விலை இல்லாத காரணத்தால், தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதியமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசே இலவம்பஞ்சுகளை உரிய விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மேட்டூர் அணை பூங்கா 2 நாள்கள் மூடல்!

ABOUT THE AUTHOR

...view details