தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"20 கி.மீ., நடந்து வர்றோம்.. இங்க இருக்க இடமில்லை... " - விவசாயிகள் வேதனை - Farmers' demand to repair society hall in Vattakanal

திண்டுக்கல்: வட்டக்கானல் பகுதியில் அமைந்திருக்கும் சமுதாய கூடத்தைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சரிசெய்யப்படாத வட்டகானல் சமுதாய கூடம்
சரிசெய்யப்படாத வட்டகானல் சமுதாய கூடம்

By

Published : Dec 4, 2019, 11:58 PM IST


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வட்டக்கானல் பகுதி உள்ளது. இங்கிருந்து சுமார் 20 கி.மீ., தொலைவில் சாலை வசதியற்ற வெள்ளக்கிவி மலைக்கிராமம் அமைந்துள்ளது. விவசாயத்தை பிரதானத் தொழில் ஆகக் கொண்ட இந்த கிராமத்து மக்கள், இவர்கள் விளைவிக்கக் கூடிய விவசாயப் பயிர்களை குதிரை மூலம் கொண்டு வந்து வட்டக்கானல் பகுதியில் விற்பனை செய்கின்றனர்.

இதற்காக வட்டகானல் வரும் விவசாயிகள் தங்க ஏதுவாக வட்டக்கானல் பகுதியில் சமுதாயக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சமுதாயக் கூடம் கட்டி, முடிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை பயன்பாட்டில் இல்லை.

சரிசெய்யப்படாத வட்டக்கானல் சமுதாய கூடம்

இதனால் வட்டக்கானல் பகுதியில் அமைந்திருக்கும் சமுதாயக் கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த விவசாயிகள் 20 கி.மீ தூரம் நடந்து வந்தும் போதிய இடமில்லாமல் தத்தளிப்பதாக வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

சூடான் தீ விபத்து - தமிழர்களை மீட்க பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details