திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட, பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் வழியாக வைகை ஆறு செல்கிறது. வைகையாற்றின் கரையோரம் அமைந்திருந்தும், விவசாயம் அழிந்து வருவதாக அப் பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் பேசுகையில், “இந்த பகுதி வழியாக வைகையாறு செல்வதால், விவசாயிகள் யாருக்கும் எந்த ஒரு பலனும் கிடையாது. இங்கு அமைந்துள்ள எந்த ஒரு கிராமத்திற்கும், வைகையாற்று நீர் வாய்க்கால் வழியாக வருவது கிடையாது.