மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக சாரல் மழை மற்றும் கன மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலில் பழங்களின் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ளது. இந்த இரண்டாம் கட்ட பழ சீசனில் முதலில் அவகோடா பழ அறுவடை ஆரம்பித்துள்ளது.
அவகோடா பழம் விலை இல்லை - விவசாயிகள் வேதனை - கொடைக்கானல் அவகோடா பழம்
திண்டுக்கல்: மருத்துவ குணம் வாய்ந்த அவகோடா பழம் விளைச்சல் இருந்தும் விலை இல்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
ஆங்கிலத்தில் பட்டர் ப்ரூட் என்று அழைக்கப்படும் அவகோடா 60 வகையில் கிடைக்கிறது. இந்த அவகோடா பழங்களை சாப்பிட்டால் வயிற்று புண், உடல் சூட்டினை தணிக்கவும், அழகு சாதன பொருள்கள் தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த பழத்தை வெளிமாநிலங்களான கோவா, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்பொது, கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையினால் அவகோடா பழம் விளைச்சல் அதிகமாக உள்ளது. ஆனால், கடந்த வருடம் ரூ.150 வரை விற்று வந்த நிலையில், இந்த வருடம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதே நிலைமை தொடர்ந்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என மலைவாழ் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.