தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த செலவில் விவசாயி உருவாக்கிய கிருமி நாசினி சுரங்கப் பாதை!

திண்டுக்கல்: எரியோடு பேரூராட்சியில் விவசாயி தான் வைத்திருந்த பயனற்ற விவசாயப் பொருள்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பாதையை அமைத்துள்ளார்.

திண்டுக்கல்
திண்டுக்கல்

By

Published : Apr 11, 2020, 11:16 AM IST

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் கிருமி நாசினி உபயோகிக்க வேண்டும் என்றும் மத்திய,மாநில அரசு அறிவுறுத்தியுள்ளனர். அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் அதிகளவில் கூடும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பாதையையும் அரசு அமைத்து வருகின்றன.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரியோடு பேரூராட்சியை சேர்ந்த ஜீவா, தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். முன்பு ஏற்பட்ட இயற்கை பேரிடரில் இவரின் தோட்டத்திலிருந்த பசுமைகுடில் சேதம் அடைந்த நிலையில் இருந்துவந்தது.

விவசாயி உருவாக்கிய கிருமி நாசினி சுரங்கப்பாதை

இதில், பயனற்ற உபகரணங்களை வைத்து தற்போது எரியோடு பேருராட்சி பேருந்து நிறுத்தம் அருகே மக்கள் நலனுக்காக தனது சொந்த செலவில் மின் மோட்டார்களை பொருத்தி கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பாதையை அமைத்துள்ளார். இதற்கான, கிருமி நாசினி உபகரணங்களை பேரூராட்சி நிர்வாகம் தொடர்ச்சியாக வழங்கி வருவதாக தெரிவித்தார். இந்தக் கிருமி நாசினி சுரங்கப் பாதையை மருத்துவர்கள் நேரில் பார்வையிட்டு ஒப்புதல் அளித்த பிறகுதான் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:லட்சத்தை தாண்டிய கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை!

ABOUT THE AUTHOR

...view details