தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வயலில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி - agri

பழனி: வயலில் மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி பலி

By

Published : Feb 10, 2019, 11:25 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கல்துறையை சேர்ந்த விவசாயி சின்னசாமி(45). இவர் இன்று காலை ஆடு மேய்ப்பதற்காக அருகே உள்ள வயலுக்கு சென்றுள்ளார்.

அப்போது மயில்சாமி என்பவரது தோட்டம் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, தோட்டத்து வேலியை சுற்றி வளர்ந்திருந்த இலைதழைகளை பறித்துள்ளார்.

அப்போது வயலில் தரையில் கிடந்த மின்சார வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கியது. இதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கீரனூர் காவல் துறையினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சின்னச்சாமி யின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு‌ அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி பலி

ABOUT THE AUTHOR

...view details