திண்டுக்கல்: தவசிமடையைச் சேர்ந்தவர் சின்னையா என்ற ஆரோக்கியசாமி (65) . இவருக்கு மரியபாக்கியம் (58) என்ற மனைவியும், மரிய யாகோப், அமல்ராஜ், லூர்துராஜ் ஆகிய மகன்களும் உள்ளனர்.
சொத்துகளை மகன்களுக்குப் பிரித்து கொடுப்பது தொடர்பாக இக்குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடைசி மகனான லூர்துராஜ் இது குறித்து தனது தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த தகராறு நேற்று (ஜூலை 20) உச்சகட்டத்தை அடைந்து மோதலில் முடிந்தது. இதில் தனது தந்தை சின்னையாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார், லூர்துராஜ். தடுக்க வந்த தாய், சகோதரர் மரிய யாகோப் ஆகியோரையும் அரிவாளால் வெட்டித் தாக்கினார்.