திண்டுக்கல் ஒன்றியம் முத்தமிழ் நகரைச் சேர்ந்த திருநங்கை சமந்தா. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு எதிர்புறத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணல் கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் டிராக்டரில் மணல் கடத்தி வரும்போது சமந்தா வீட்டில் உள்ள நாய்கள் குரைத்து இடையூறு செய்துள்ளது. இதனால் சமந்தா வளர்த்த 10க்கும் மேற்பட்ட நாய்களை சீனிவாசன் விஷம் வைத்து கொன்றதாக சமந்தா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து சீனிவாசன் அவரது மகன் லெட்சுமணன், நிவின்குமார் என்ற அப்புக்குட்டன் ஆகியோருக்கு ஆதரவாக திண்டுக்கல் தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் தெய்வம், சமந்தாவின் வீட்டுக்குச் சென்று அவரை மிரட்டியதோடு, அவரது சாதியைச் சொல்லி திட்டி, தடியால் அடித்து, வீட்டை விட்டு விரட்டியுள்ளார்.