தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிப் புத்தகங்களில் ஜெயலலிதா புகைப்படம் - வலுக்கும் சர்ச்சை - DINDIGUL

கொடைக்கானலில் பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டு வழங்கப்பட்ட புத்தகங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படம் அகற்றப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல், பள்ளி புத்தகங்களில் ஜெயலலிதா புகைப்படம்
பள்ளி புத்தகங்களில் ஜெயலலிதா புகைப்படம்

By

Published : Jul 11, 2021, 4:41 PM IST

Updated : Jul 11, 2021, 6:17 PM IST

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தடை நீடித்து வருகிறது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்களது படிப்பை ஆன்லைன் மூலம் தொடர்ந்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஆன்லைன் வகுப்பிற்காக பள்ளிகளில் தற்போது புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொடைக்கான‌லில் அர‌சு ம‌ற்றும் அர‌சு உத‌வி பெறும் ப‌ள்ளிக‌ளில் தமிழ்நாடு அரசு வழங்கும் புத்தகம், கையேடுகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்ப‌ட‌ம் இட‌ம்பெற்றுள்ள‌து.

பள்ளிப் புத்தகங்களில் ஜெயலலிதா புகைப்படம்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், தற்போதைய முதலமைச்சரின் புகைப்படம் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், இதுவரை தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் முதலமைச்சரின் புகைப்படம் மாற்றப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ப‌ள்ளி நிர்வாக‌த்திட‌ம் கேட்ட‌போது, 'க‌ட‌ந்த‌ ஆண்டு அர‌சால் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ புத்த‌கங்க‌ள் கையேடுக‌ள் கையிருப்பில் இருந்த‌தால், தற்போது அவை மாண‌வ‌ மாண‌விக‌ளுக்கு கொடுக்க‌ப்பட்டுள்ள‌து' என‌த் தெரிவித்த‌ன‌ர்.

இதையும் படிங்க: 25 years of காதல் கோட்டை: மறக்க முடியாத சூர்யா - கமலி

Last Updated : Jul 11, 2021, 6:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details