திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக தளர்வுகளுடன் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது.
இணையதளம் வாயிலாக தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் - திண்டுக்கல் கரோனா பாதிப்பு
திண்டுக்கல்: கரோனா பாதிப்பு காரணமாக தொழில்நெறி விழிப்புணர்வு வாரம், திறன் வாரம் நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையதளம் வாயிலாக நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தொழில்நெறி விழிப்புணர்வு வாரம், திறன் வாரம் நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையதளம் வாயிலாக நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வரும் 8ஆம் தேதிமுதல் 15ஆம் தேதிவரை தொழில்நெறி விழிப்புணர்வு வாரம், திறன் வாரம் கடைபிடிக்க உள்ளது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழில் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகுபவர்கள் ஆகியோருக்கு இணையதளம் வாயிலாக தொழில்நெறி வழிகாட்டுதல், தொழில்திறன் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
எனவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். பங்குபெற விரும்புபவர்கள் 0451-2461498 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு இணையதள இணைப்பு விவரத்தினை பெற்று பயன்பெறலாம்" என்றார்.
இதையும் படிங்க: உறவினர்களால் கைவிடப்பட்ட பாட்டி: உதவிக்கரம் நீட்டிய ஃபேஸ்புக் நண்பர்கள்!
TAGGED:
திண்டுக்கல் கரோனா பாதிப்பு