திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள மேல்மலை கிராமங்களான கே சி பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் யானைகள் தொடர்ந்து விளைநிலங்களுக்குள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் விவசாயிகள் விளை பொருட்களை விளைவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
கொடைக்கானல் கீழ் மழை கிராமங்களில் ஒன்றான கள்ளக் கிணறு பகுதியில் முத்துப்பாண்டி என்பவரின் தோட்டத்தில் 10 ஏக்கருக்கும் மேலாக இருந்த வாழை மரங்களை முழுவதுமாக சேதப்படுத்தி குடியிருந்த வீட்டையும் யானைகள் நொறுக்கியுள்ளது.