திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலையான பாச்சலூர் மலைப்பகுதியில் பரப்பலாறு அணை உள்ளது. இந்த அணையில் ஒரு மாத காலமாக ஒற்றை யானை தஞ்சமடைந்துள்ளது. இந்த யானையால் அணைக்கு வரும் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனையடுத்து பரப்பலாறு அணைக்கு பொதுமக்கள் செல்ல வனத் துறை மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.