தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலுக்கு சுற்றுலா வராதீங்க! கடைகளை துவம்சம் செய்த யானைகள்! - dindigul news

Elephant are damaged the shops: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம் பகுதியில் உள்ள தரை கடைகளை யானைகள் சேதப்படுத்தி உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல இன்று (செப்.19) தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப்பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
கொடைக்கானலில் யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப்பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 6:12 PM IST

கொடைக்கானலில் யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப்பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம் பகுதியில் உள்ள தரைக்கடைகளை யானைகள் சேதப்படுத்தி உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல இன்று (செப்.19) தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில், கொடைக்கானல் மலைப்பகுதி முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகின்றன. கொடைக்கானலில் பெரும்பாலான சுற்றுலா இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. குறிப்பாக மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து பாரமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகளுக்குள் செல்வதற்கு வனத்துறையினரிடம் நுழைவு கட்டணம் பெற்று செல்ல வேண்டிய நிலை உள்ளன.

இது மட்டுமில்லாமல், பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கு வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற்று செல்ல வேண்டும். பேரிஜம் ஏரியில் கடந்த 9 நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. இதனால், இங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை தடை விதித்திருந்தது.

இதையும் படிங்க:பேரிஜம் ஏரியில் 8 நாட்களாக காட்டு யானைகள் முகாம்.. வனத்துறை மெத்தனம் என சுற்றுலாப் பயணிகள் குற்றச்சாட்டு!

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ள மோயர் சதுக்கம் பகுதியில் நேற்று (செப்.19) இரவு காட்டு யானைகள், அப்பகுதியில், உள்ள சுமார் 10 மேற்பட்ட தரைக்கடைகள் முழுவதையும் சேதப்படுத்தி உள்ளது. இதனை அறிந்த தரைக்கடை வியாபாரிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் காரணமாக வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் இப்பகுதிக்குள் செல்வதற்கு தற்காலிக தடை விதித்துள்ளனர்.

இப்பகுதியில், முகாமிட்டுள்ள யானைகளை விரட்டுவதில் வனத்துறையினர் அலட்சியம் காட்டி, தாமதம் ஏற்படுத்தி வருவதால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கடை உரிமையாளர்கள், மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் சுற்றுலா பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க:Ganesh Chaturthi in Dindigul: ஆசியாவிலேயே ஒரே கல்லில் ஆன 32 அடி உயர விநாயகர்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

ABOUT THE AUTHOR

...view details