திண்டுக்கல்லைச்சேர்ந்தவர் அருள்ஜோதி (வயது 33). இவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே அவர் தனது எலக்ட்ரிக் பேட்டரி ஸ்கூட்டரில் திண்டுக்கல் நோக்கி இன்று சென்று கொண்டிருந்தார்.
திருச்சி முதல் திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே அய்யலூர் மேம்பாலத்தில் ஸ்கூட்டர் சென்றுகொண்டிருந்த பொழுது, திடீரென பேட்டரி பகுதியிலிருந்து புகையுடன் நெருப்புக்கிளம்பியது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அருள்ஜோதி ஸ்கூட்டரை விட்டு இறங்கி ஓடிவிட்டார்.