தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரி தேர்தல் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்! - தேர்தல் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததைக் கண்டித்து தேர்தல் அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.

localbodyelection
localbodyelection

By

Published : Jan 2, 2020, 9:26 PM IST

திண்டுக்கல் மாவட்ட தனியார் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், தேர்தல் அலுவலர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாமல் இருந்ததால் அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசிய அலுவலர்கள் கூறுகையில், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமே எங்களுக்கு செய்து தரப்படவில்லை. காலை உணவாக இரண்டு இட்லி மட்டுமே வழங்கப்பட்டது. டீ கூட தரவில்லை. மேலும் மாலை 4 மணி ஆகியும் இதுவரை எங்களுக்கு மதிய உணவு வழங்கப்படவில்லை. இதனால் பெண் ஒருவர் மயங்கிவிட்டார். இப்படி இருந்தால் நாங்கள் எப்படி பணி செய்ய இயலும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரி தேர்தல் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், தேர்தல் அலுவலர்கள் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வாக்கு எண்ணும் பணிகள் தாமதம் - ஆட்சியர் கந்தசாமி நேரில் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details