திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தா. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர், கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்னை காரணமாக சிரமப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மே 12ஆம் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, அவருடைய மகன் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தண்டபாணியைத் தேடிவந்தனர். இந்நிலையில், தா. புதுக்கோட்டை அருகே உள்ள அடர்ந்த மலைப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின்பேரில் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தனர்.