திண்டுக்கல்:தமிழ்நாட்டில் நடைபெற்ற மணல் குவாரி முறைகேடு தொடர்பாக தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று (செப்.12) காலை 9 மணி முதல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நேற்று இரவு 11மணியளவில் கோவிந்தன் வசிக்கும் ஹனிபா நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை நிறைவு செய்தனர். திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் உள்ள ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில் இரவு முழுவதும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து 2ஆவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ரத்தினம் வீட்டில் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த சோதனையின்போது மனைவி, இரு மகன்கள், தாயார் ஆகியோர் உடன் இருந்தனர்.