தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல் மருத்துவரிடம் ரூ.20 லட்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது! - Etv Bharat Tamil news

ED Officer Ankit Tiwari Bribe: திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரை மிரட்டி இருபது லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 12:26 PM IST

Updated : Dec 1, 2023, 1:31 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எஸ்.பி. சரவணன் தலைமையில் டிஎஸ்பி நாகராஜன், ஆய்வாளர் ரூபா கீதாராணி ஆகியோர் செட்டி நாயக்கன்பட்டி அருகே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது காரில் இருந்தவர் அங்கித் திவாரி நாக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

பின்னர், செட்டி நாயக்கன்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று காரின் உள்ளே சோதனையிட்டபோது ரூ.20 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காருடன் அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்கு அழைத்துக்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், அங்கித் திவாரி நாக்பூரில் பணியாற்றி வந்த நிலையில் 4 மாதம் முன் இவர் மதுரை மண்டலத்தில் பணியாற்றுவது முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் பகுதியில் மருத்துவர் ஒருவர் மீது அமலாக்கத்துறையில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் அதனை முடித்து வைக்க மதுரையில் பணியாற்றி வரும் அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டதாக மருத்துவர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த அதிரடி சோதனையானது நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:லோகாண்டோ மூலம் பேராசிரியரிடம் ரூ.7.70 லட்சம் மோசடி..! பெங்களூரில் பிடிபட்ட மோசடி கும்பல்..!

Last Updated : Dec 1, 2023, 1:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details