திண்டுக்கல்: அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி, ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு இன்று(டிச.05) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி மோகனா, வழக்கு முதற்கட்ட விசாரணையில் இருப்பதால் தற்போதைக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!
Ankit Tiwari: மருத்துவரிடம் பணம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கதுறை அதிகாரி அங்கிட் திவாரியின் ஜாமீன் மனுவை திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அமலாக்கத் துறை அதிகாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி
Published : Dec 5, 2023, 1:44 PM IST