திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்களான பாயிண்ட், குணா குகை, தூண்பாறை, பைன் காடுகள் உள்ளிட்டவை உள்ளன.
நகர் பகுதியில் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ்வாக் போன்ற இடங்கள் உள்ளன. ஏற்கனவே கரோனா ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது.
தற்போது கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்பு கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினர். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (நவ. 14) கொண்டாடப்படுகிறது.