தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் தேக்கங்களில் நீர்மட்டம் குறைவு - தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! - கொடைக்கானல் நகராட்சி செய்திகள்

திண்டுக்கல்: கொடைக்கானலிலுள்ள குடிநீர் தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

water scarcity in kodaikkanal
கொடைக்கானல் குடிநீர் தேக்கம்

By

Published : Oct 2, 2020, 6:46 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இரு குடிநீர் தேக்கங்கள் அமைந்துள்ளன.

இந்தக் குடிநீர் தேக்கங்களில் இருந்து கொடைக்கானல் நகர் பகுதிகளான பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, புதுக்காடு, செல்வபுரம், கீழ்பூமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவ மழை தாமதமானதால் மழையின் அளவும் குறைந்தே காணப்பட்டது. இதனால் நகரப் பகுதிகளுக்கு தற்போது 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அப்சர்வேட்டரி குடிநீர் தேக்கமானது மொத்தம் 22 அடி ஆழம் உள்ள நிலையில், தற்போது நான்கு அடி அளவு மட்டுமே தண்ணீர் இருக்கிறது.

மேலும், கொடைக்கானல் பகுதிகளுக்கு மற்றொரு குடிநீர் ஆதாரமாக திகழும் மனோரஞ்சிதம் நீர்த்தேக்கத்தில் 17 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதன் காரணமாக குடிநீர் விநியோகம் செய்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. தொடர் மழை பெய்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: படுக இன மக்களின் பாடலுக்கு கரோனா நோயாளிகள் நடனம்

ABOUT THE AUTHOR

...view details