திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி அருகே கருங்காலக்குடியில் இருந்து நத்தம் நோக்கி வந்த அரசு நகரப் பேருந்தை வழிமறித்த போதை ஆசாமி ஒருவர் பேருந்துக்கு அடியில் படுத்து ரகளை ஈடுபட்டார். இதனால் நத்தம்-காரைக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த போதை ஆசாமியை அழைத்து சென்றனர்.
அரசுப்பேருந்தை வழிமறித்து போதை ஆசாமி ரகளை - போலீசார் வழக்குப்பதிவு - A drug addict who was waylaid
நத்தத்தில் அரசுப்பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
Etv Bharatஅரசு பேருந்தை மறித்து போதை ஆசாமி ரகளை - போலீஸார் வழக்குப்பதிவு
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த ஆசாமி செங்குளத்தை சேர்ந்த பாண்டி பிரபு (26) என்பதும், தேங்காய் உறிக்கும் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் மீது நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க:மனைவியை துன்புறுத்தி சின்னத்திரை நடிகர் - படப்பிடிப்பு தளத்தில் வைத்து அதிரடி கைது