தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விடுடா.. தேவை இல்லாம பிரச்னை ஆயிடும்' பஸ் ஓட்டுநரிடம் ரகளை செய்த புள்ளிங்கோ! - Drunk person stopped government bus

திண்டுக்கல்லில் அரசு பேருந்தை வழிமறித்து ஆபாசமாக பேசி ஓட்டுநருடன் ரகளை செய்த போதை ஆசாமியின் வீடியோ வெளியாகியுள்ளது.

ஓடுநரிடம் ரகளை செய்யும் போதை ஆசாமியின் வீடியோ
ஓடுநரிடம் ரகளை செய்யும் போதை ஆசாமியின் வீடியோ

By

Published : Nov 16, 2022, 6:48 PM IST

திண்டுக்கல்: நிலக்கோட்டை பகுதியில் இருந்து தினமும் 2 மணி அளவில் சக்கையநாயக்கனூர், மேட்டூர் வழியாக திண்டுக்கலை நோக்கி அரசு நகரப் பேருந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று அரசு நகர பேருந்தை ஆரோக்கியதாஸ் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார்.

நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லை நோக்கி செண்றுகொண்டிருந்த போது, திடீரென மதுபோதையில் இளைஞர் ஒருவர் அரசு நகரப் பேருந்தை வழிமறித்து ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளார். இதுகுறித்து ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் கேட்ட போது அவரையும் தரக் குறைவாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளார்.

மேலும், பேருந்தை நிறுத்திய ஓட்டுனரிடம் பேருந்துக்குள் ஏறி சண்டை போடத் துவங்கியதால், பேருந்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் அதர்ச்சியுற்றனர். பின்னர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி, ஓட்டுநரும் போதை இளைஞரும் சண்டையிட்டு உருண்டனர். இதை எதிர்த்து கேள்வி கேட்ட பொதுமக்களையும் போதை ஆசாமி ஆபாசமாக பேசி உள்ளார்.

ஓடுநரிடம் ரகளை செய்யும் போதை ஆசாமியின் வீடியோ

தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்து எங்கும் செல்லாமல் அதே இடத்தில் நின்றது. பின்னர் அந்த போதை ஆசாமியை பிடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் இப்பகுதியில் நடக்க கூடாது என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:அட்வைஸ் பண்ண ஆசிரியர் மண்டை உடைப்பு.. விழுப்புரம் பகீர் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details