திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு, நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதில் அதிகம் சுற்றுலாப் பயணிகள் கூடும் பகுதியாக ஏரிசாலை உள்ளது. இங்கு மதுரையில் இருந்து இரண்டு இளைஞர்கள் சுற்றுலா வந்தனர்.
இருவரும் அதிக மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏரிசாலை பகுதியில் வாகன ஓட்டி ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டதோடு, அவரைத் தாக்கியுள்ளனர். இதைக் கண்ட சக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இருவரையும் பிடித்து வைத்தனர்.