தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் சுத்திகரிக்கப்படாமல் விநியோகிக்கப்படும் குடிநீர்

திண்டுக்கல்: கொடைக்கானல் நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் சுத்திகரிக்கப்படாமல் விநியோகிப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

KODAIKANAL WATER BUND
KODAIKANAL WATER BUND

By

Published : Apr 29, 2021, 12:36 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான தலைமை குடிநீர் தேக்கம் அமைந்துள்ளது.

21 அடி கொண்ட இந்தக் குடிநீர் தேக்கத்திலிருந்து கொடைக்கானல் நகர்ப் பகுதிகளான பாம்பார்புரம், புதுக்காடு, செல்லபுரம், வட்டக்கானல், அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் நகராட்சியால் விநியோகம்செய்யப்படுகிறது.

கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கமும் அதிகரித்துவருவதன் காரணமாக நீர்நிலைகள் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்துவந்தது. அவ்வப்போது பெய்த மழையால் நீர்மட்டமும் உயர்ந்தது.

இந்நிலையில் இங்கிருந்து விநியோகம் செய்யப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்படாமலும் விநியோகிக்கப்படுகிறது.

இதனால் தற்போது தொற்றுநோய் பரவிவரும் சூழலில் இதனைப் பருகும் பொதுமக்களுக்குத் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே தண்ணீரை சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details