திண்டுக்கல், போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி சிக்னல் அருகே உள்ள டாக்ஸி ஸ்டாண்டில் ஓட்டுநராக இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர் வசிக்கும் வீட்டின் அருகேயுள்ள குறுகலான சாலைப் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், வேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டியதாகக் கூறப்படுகிறது. இதை டாக்ஸி டிரைவரான முருகன் கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறந்ததை அடுத்து இளைஞர்கள் மது அருந்திவிட்டு முருகனிடம் தகராறு செய்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மது அருந்திய இளைஞர்கள் முருகனை கட்டை, தடியால் பலமாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த முருகன் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.