தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடிந்த தரைப்பாலத்தை சீரமைத்து தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை! - இடிந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்த பொதுமக்கள்

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே சாக்கடைக்காக அமைக்கப்பட்ட தரைப்பாலம் இடிந்து, வாகனங்கள் விபத்துக்குள்ளாவதால் உடனடியாக இதனை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான முறையில் இடிந்து கிடக்கும் தரைப்பாலம்

By

Published : Nov 16, 2019, 10:52 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம்பட்டி கிராமத்தில் சாக்கடைக்காக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் இடிந்துள்ளது. இதனால், சாக்கடை நிரம்பி மக்கள் செல்லும் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

மேலும், இந்தப் பகுதியிலிருந்து தென்னம்பட்டி, கரட்டுப்பட்டி, வடமதுரை போன்ற பகுதிகளுக்கு செல்லம் பாதையில் தரைப்பாலம் இடிந்துள்ளதால் அவ்வழியாக வரும் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் அவ்வப்போது விபத்துக்குள்ளாகின்றன.

ஆபத்தான முறையில் இடிந்து கிடக்கும் தரைப்பாலம்

பாலத்தின் அருகே நிரம்பியுள்ள சாக்கடை நீரால் துர்நாற்றம் வீசிவதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் இது குறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள கிராம செயலாளரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு போன்ற பல்வேறு நோய்கள் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த தரைப்பாலத்தை சரி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மழைநீருடன் கலந்துள்ள கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..!

ABOUT THE AUTHOR

...view details