தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வினால் ஏற்பட்ட மரணங்களுக்கு திமுகவே காரணம் - செல்லூர் ராஜு

திண்டுக்கல்: நீட் தேர்வினால் ஏற்பட்ட மரணங்களுக்கு திமுகவே காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜு குற்றஞ்சாட்டியுள்ளார்.

minister
minister

By

Published : Sep 25, 2020, 6:35 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பூத்தாம்பட்டி பகுதியில் பெட்ரோல் டீசல் சில்லரை விற்பனை நிலையத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்ஆகியோர் திறந்துவைத்தனர்.

இந்நிலையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, "திமுக ஆட்சியில் பயிர்க்கடன் ரூ.7,000 கோடி ரத்து செய்தோம் என்றும் பொய் சொல்கிறார்கள். உண்மையில் தள்ளுபடி செய்தது ரூ.3,092கோடிதான். ஆனால் அதிமுக அரசு 5,300 கோடி ரூபாய் தள்ளுபடி செய்துள்ளது. இதுவரை நீட் தேர்வில் 13 மாணவர்கள் இறந்ததற்கு திமுக கூட்டணிதான் காரணம்" எனக் கூறினார்.

பின்னர் 14,512 பயனாளிகளுக்கு சுமார் 103 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு வழங்கினார்கள். இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details