தமிழ்நாட்டில் இரண்டாம்கட்ட கரோனா தொற்று தீவிரமடைந்துவருகிறது. இதன் காரணமாக நாளை (ஏப். 20) முதல் தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு கரோனா தொற்று காரணத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவந்த கொடைக்கானல் மக்கள் கடந்த ஐந்து மாதங்களாகத் தொழில் செய்துவந்தனர்.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வருவதற்கு மீண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் எனக் கூறி அனைத்துத் தரப்பு மக்களும் அறவழியில் கொடைக்கானலில் போராட்டம் நடத்திவருகின்றனர்.