சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை, தேர்தல் பணிகள் நிறைவடைந்ததையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கடந்த வெள்ளிக்கிழமை கொடைக்கானலுக்கு ஓய்விற்காக சென்றார்.
பாம்பார்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வு எடுத்த அவர், விடுதியை விட்டு வெளியில் வராமல் விடுதியில் இருந்தபடியே நடைபயிற்சி, உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வந்தார்.
முயல் பண்ணையில் மனைவியுடன் ஸ்டாலின் பிறகு கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, கூக்கால் உள்ளிட்ட கிராமங்களுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றார். மன்னவனூரில் உள்ள ஆட்டுப்பண்ணை, முயல் பண்ணை, சூழல் சுற்றுலா மற்றும் கூக்கால் ஏரியை அவர் கண்டு ரசித்தார்.
சென்னை திரும்பும் ஸ்டாலின் இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு பிறகு மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்.