திண்டுக்கல்:திமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி திண்டுக்கல் ஒன்றியத்தில் தனது தேர்தல் பரப்புரை சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகோட்டை பகுதி வயல்வெளிகளில் வேலை பார்த்துவந்த பெண்களையும், விவசாயிகளையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி சிந்திக்காத அதிமுக அரசிற்கு மக்கள் மத்தியில் வாக்குகள் கேட்க என்ன உரிமை இருக்கிறது. ஏழை எளிய மக்கள் கரோனாவால் இறந்தார்கள். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் மக்களிடத்தில் பணத்தைக் கொடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என நினைக்கிறார்கள்.