தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல் பெயரளவில் மட்டுமே மாநகராட்சி அந்தஸ்து பெற்றுள்ளது - ஐ.பெரியசாமி - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் : அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டம் பெயரளவில் மட்டுமே மாநகராட்சி அந்தஸ்து பெற்றுள்ளதாக ஆத்தூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

dmk-ex-minister-i-periyasamy-campaign-in-dindugul
dmk-ex-minister-i-periyasamy-campaign-in-dindugul

By

Published : Apr 2, 2021, 6:06 PM IST

திமுக அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் பாண்டியனை ஆதரித்து, ஆத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பெரியசாமி பேகம்பூர் பள்ளி வாசல், மேட்டுப்பட்டி தேவாலயம், பாரதிபுரம் சாய்பாபா கோயில், மெங்கிள்ஸ் ரோடு உள்ளிட்டப் பல பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், 'திண்டுக்கல் மாவட்டம் பெயரளவிலேயே மாநகராட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. ஆனால், மாநகராட்சிக்கு உரிய எவ்வித வசதிகளும் திண்டுக்கல் மாவட்டத்தில் செய்து தரப்படவில்லை. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் பெருமைக்காகவே மாவட்டத்திற்கு மாநகராட்சி அந்தஸ்து பெற்றுத் தந்திருக்கிறார்’ என்றார்.

ஆத்தூர் திமுக சட்டபேரவை உறுப்பினர் ஐ.பெரியசாமி

மேலும், அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் அரசுப் பணிகள் நடக்க வேண்டும் என்றால் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தேர்தல் பரப்புரை செய்தார்.

அதேபோல், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவும், திமுக ஆட்சியில் தான் முடியுமென்றும் கூறினார்.

இதையும் படிங்க:
அண்ணா சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details